திமுக தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும்: ஸ்டாலின் தகவல்

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
திமுக தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும்: ஸ்டாலின் தகவல்

திமுகவின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 10ம் திகதி வெளியிடப்படும் என அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைக்கான தேர்தல் மே 16ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அனைத்து கட்சியினரும் தங்களது பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா தனது பிரசாரத்தை இன்று தொடங்கவுள்ளார். அக்கட்சியின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும் என அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், திமுகவின் தேர்தல் அறிக்கை நாளை (ஞாயிற்றுகிழமை) வெளியாகும்.

திமுக தலைவர் கருணாநிதியை இதனை வெளிடுவார் என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை