திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள்!

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள்!

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இந்நிலையில், மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில், ராமநாதபுரம், நாகப்பட்டினம், ஆம்பூர், தொண்டாமுத்தூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 5 தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகளும், புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகளும் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை