தேர்தலுக்காக அரசு வேலையை ராஜினாமா செய்த 22 அதிமுக வேட்பாளர்கள்

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
தேர்தலுக்காக அரசு வேலையை ராஜினாமா செய்த 22 அதிமுக வேட்பாளர்கள்

அதிமுக சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் 22 பேர் இதுவரை அவர்கள் பணியாற்றிய அரசு பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளனர்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

மேலும், அந்த பட்டியலில் உள்ள சிலரை மாற்றியும் அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களில் 22 பேர் இதுவரை அவர்கள் பணியாற்றிய அரசு பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளனர்.

தேர்தலில் போட்டியிடுவோர் ஆதாயம் தரும் அரசு பணிகளில் இருக்கக் கூடாது என்ற, தேர்தல் விதிமுறைகளின்படி அவர்கள் பதவி விலகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக நல வாரிய தலைவர் பதவியில் இருந்து சி.ஆர்.சரஸ்வதி, சிறுதொழில் வளர்ச்சி கழக தலைவர் பதவியில் இருந்து ஜே.சி.டி.பிரபாகரன், வக்பு வாரிய தலைவர் பதவியில் இருந்து தமிழ்மகன் உசேன் ஆகியோர் விலகியுள்ளனர்.

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் பதவியில் இருந்து சுந்தரராஜன், தமிழ்நாடு அரசு சிறப்பு பிரதிநிதி பதவியில் இருந்து எஸ்டிகே ஜக்கையன் ஆகியோர் விலகியுள்ளனர்.

மேலும் இதேபோல் 17 பேர் தங்கள் பதவியில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை