குடிபோதையில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட நபர்: அலறியடித்து ஓடிய பொதுமக்கள்

NEWSONEWS  NEWSONEWS
குடிபோதையில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட நபர்: அலறியடித்து ஓடிய பொதுமக்கள்

மத்திய பாரீஸில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து நேற்று பிற்பகல் வேளையில் சரமாரியாக துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு மக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர்.

பொலிசாருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டவுடன், விரைந்து வந்த பொலிசார் அங்குள்ள மக்களை வெளியேற்றி அப்பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

கடந்த நவம்பர் மாதம் Canal St Martin என்ற இதே பகுதிக்கு அருகில் உள்ள இரண்டு உணவகங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தினர்.

தற்போது இதே இடத்தில் மீண்டும் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதால் இதுவும் தீவிரவாத தாக்குதலாக இருக்கும் என எண்ணிய மக்கள் அச்சத்தில் அலறியுள்ளனர்.

ஆனால், இப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்திய பொலிசார் துப்பாக்கி வெடித்த குடியிருப்பை நோக்கி முன்னேறி சென்றுள்ளனர்.

சில நிமிடங்கள் போராட்டத்திற்கு பின்னர் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த பொலிசார் அங்குள்ள நபர் ஒருவரிடமிருந்து இரண்டு துப்பாக்கிகளை கைப்பற்றினர்.

நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் குடிபோதையில் இவ்வாறு நடந்துக்கொண்டதாகவும், இந்த சம்பவத்திற்கும் தீவிரவாதத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.

மூலக்கதை