பக்கத்து கிராமத்தில் நடந்த திருமணத்துக்கு ஹெலிகாப்டரில் சென்ற மாப்பிள்ளை

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
பக்கத்து கிராமத்தில் நடந்த திருமணத்துக்கு ஹெலிகாப்டரில் சென்ற மாப்பிள்ளை

உத்தரப்பிரதேசத்தில் பக்கத்து ஊரில் நடந்த தனது திருமணத்துக்கு மாப்பிள்ளை ஹெலிகாப்டரில் சென்று இறங்கியுள்ளார்.

சஹரான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ராவ் ஷம்சாத், நய் பஸ்டி நகர் நகராட்சி மன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், இவரது தம்பி நவ்ஷாத் என்பவருக்கும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ராவ் ஷம்சாத்தின் வீட்டில் இருந்து அலங்கரிக்கப்பட்ட யானைமீது மணமகனை அமர்த்தி மாப்பிள்ளை ஊர்வலம் நடத்தியுள்ளனர்.

பின்னர் பேருந்து நிலையத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக ஹெலிபேட்டில் தயாராக இருந்த ஹெலிகாப்டரில் ஏறிய மாப்பிள்ளை பக்கத்து கிராமத்திற்கு அதில் பயணித்துள்ளார்.

இந்த யானை ஊர்வலத்தையும், ஹெலிகாப்டர் சவாரியையும் பார்க்க அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.

ராவ் ஷம்சாத் இது தொடர்பாக கூறுகையில், எனக்கு பின்னால் பிறந்த ஆறு தம்பியர்களில் நவ்ஷாத்தான் கடைக்குட்டி.

எனவே, அவனது திருமணத்தை ஊர்மக்கள் நினைவில் நிற்கும் வகையில் பிரமாண்டமாக நடத்த நினைத்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை