அன்று நவீனத்தில் அடையாளம்.. இன்று குற்றச்செயல்களின் பிறப்பிடம் (வீடியோ இணைப்பு)

NEWSONEWS  NEWSONEWS
அன்று நவீனத்தில் அடையாளம்.. இன்று குற்றச்செயல்களின் பிறப்பிடம் (வீடியோ இணைப்பு)

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியா பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக தற்போது திகழ்ந்து வருகிறது.

எனினும் கடந்த 1953ஆண்டு சுதந்திரம் அடைந்த போது அந்நாட்டு மிகவும் பின்தங்கிய நாடாகவே இருந்தது.

எனவே கம்போடியாவில் நவீனத்துவத்தை புகுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக நடுத்தர வசதியுள்ள குடும்பத்தினர் வசிப்பதற்காக கம்போடியா தலைநகர் பினோம் பென்னில் மிகப்பெரிய அடிக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது

முற்றிலும் வெள்ளை நிறத்தில் கம்பீரமாக இந்த அந்த அடிக்குமாடி குடியிருப்பு வெள்ளை கட்டிடம் என்றே அழைக்கப்பட்டது. கம்போடிய வரலாற்றில் இந்த கட்டிடம் தனி இடம் பிடித்துள்ளது.

இவ்வாறு ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கிய இந்த குடியிருப்பு தற்போது விபச்சாரத்துக்கும் போதைப்பொருளுக்கும் பிரபலமாக உள்ள அவலம் ஏற்பட்டுள்ளது.

கம்போடிய இனப்படுகொலையின் போது ஏராளமானோர் இங்கிருந்து வெளியேறி சென்றுவிட்டனர்.

இடையில் கட்டிடத்தில் பெரும் விரிசல் ஏற்பட்டதையடுத்து மேலும் சிலர் வெளியேறினர்.

இதனால் சிதிலமடைந்து போன இந்த கட்டிடத்தில் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களும் போதைப்பொருட்களை பயன்படுத்துபவர்களும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களும் வந்து குடியேறினர்.

இதனால் ஒரு காலத்தில் நவீனத்தின் குறியீடாக புகழப்பட்ட இந்த கட்டிடம் தற்போது ஏழ்மையின் குறியீடாக மாறியுள்ளது.

எப்போது வேண்டுமென்றாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய திட்டத்தை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும் அங்கு வசித்து வரும் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எனினும், இந்த கட்டிடம் இடிந்து விழுந்தால் ஏராளமான உயிர் பலி ஏற்படக்கூடும் என்பதால் உடனடியாக அங்கிருந்து மக்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மூலக்கதை