பெண்ணை கொலை செய்த சிறுமிகளுக்கு காரில் ‘லிப்ட்’ கொடுத்த பொலிசார்: நடந்தது என்ன?

NEWSONEWS  NEWSONEWS
பெண்ணை கொலை செய்த சிறுமிகளுக்கு காரில் ‘லிப்ட்’ கொடுத்த பொலிசார்: நடந்தது என்ன?

இங்கிலாந்தில் உள்ள Hartlepool என்ற நகரில் பெயர் வெளியிடப்படாத 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகள் வசித்து வந்துள்ளனர்.

இருவரும் கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் காணாமல் போனதாக பொலிசாருக்கு புகார் வந்துள்ளது.

ஆனால், இதே நாளில் Angela Wrightson(39) என்ற பெண்ணை இருவரும் 100 முறை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். ஆனால், கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

பெண்ணின் வீட்டிற்குள்ளேயே கொலை செய்த இருவரும் மிக சாதாரணமாக வீட்டிற்கு வெளியே வந்து பொலிசாரை அழைத்துள்ளனர்.

‘காணாமல் போனதாக கூறப்பட்ட இருவரும் நாங்கள் தான். விரைவாக வந்து எங்களை அழைத்துச் செல்லுங்கள்’ என கூறியுள்ளனர்.

அதிகாலை 4 மணியளவில் தகவலை பெற்ற பொலிசார் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று இருவரையும் காரில் ஏற்றியுள்ளனர்.

சில நிமிடங்களுக்கு முன்னர் கொலை செய்ததை காட்டிக்கொள்ளாத இருவரும் சிரித்து பேசிக்கொண்டு வந்ததால், அவர்கள் உடுப்பில் ரத்தக் கறைகள் இருந்ததையும் பொலிசார் கவனிக்க தவறியுள்ளனர்.

இருவரையும் அவர்களது வீட்டில் சேர்த்த பொலிசார் காவல் நிலையம் திரும்பிய பின்னரே கொலை தொடர்பான தகவல்கள் பொலிசாருக்கு கிடைத்துள்ளது.

தற்போது 15 வயதை அடைந்துள்ள இருவர் மீதான குற்றங்களும் நேற்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இறுதி தீர்ப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை