கருணாநிதியை சாதி ரீதியாக தாக்கிய பேசிய வைகோ!

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
கருணாநிதியை சாதி ரீதியாக தாக்கிய பேசிய வைகோ!

கட்சிகளை பிரிப்பது தி.மு.க. தலைவர் கருணாநிதியின் குணம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டியளித்துள்ளார்.

சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், கட்சிகளை பிரிப்பது தி.மு.க. தலைவர் கருணாநிதியின் குணம். உலக மகா மோசடி செய்வதில் கருணாநிதியை யாரும் மிஞ்ச முடியாது.

2006-ம் ஆண்டு ம.தி.மு.க.வை ஒழிக்கவும், தாயகத்தை கைப்பற்றவும் அவர் முயற்சி செய்தார்.

அத்துடன் ம.தி.மு.க.வுக்கு எதிராக போட்டி பொதுக்குழுவை ஏற்படுத்தவும் கருணாநிதி முயன்றார்.

2ஜி ஊழல் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் சேர்த்துள்ளது அக்கட்சி.

தே.மு.தி.க. தங்கள் கூட்டணியில் சேராததால் கட்சியை உடைக்க தி.மு.க. முயற்சி செய்கிறது.

நெல்லை மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் முகமது அலியை தி.மு.க.வுக்கு அழைத்து வருவதற்கு 3 கோடி ரூபாய் பேரம் பேசினார்கள்.

தே.மு.தி.க. தலைமையை விமர்சித்த சந்திரகுமார் விஜயகாந்துக்கு துரோகம் செய்துவிட்டார்.

சமீபத்தில் தான் அவருக்கு பணப்பட்டுவாடா நடந்திருக்க வேண்டும். கேப்டன் கிணற்றில் குதிக்க சொன்னால்கூட குதிப்பேன் என்று ஆவேசமாக பேசியவர், இப்போது உண்மையிலேயே கிணற்றில் குதித்துவிட்டார் என பேசியுள்ளார்.

கருணாநிதியை தாக்கிய வைகோ

மேலும் அவர் பேசுகையில், தேமுதிகவின் சந்திரகுமார் செய்தது பச்சைதுரோகம்...இதைவிட நீ பாலில் விஷத்தைக் கொடுத்து... விஜயகாந்துக்கு விஷத்தைக் கொடுத்திருக்கலாம்...

சோத்துல விஷத்தைப் போட்டிருக்கலாம்.. போடுவீங்க நீங்க... இந்த மாதிரி ஆளுக... நாங்க நம்புறவனுக்காக தலையை கொடுப்போம்...நம்புறவனுக்காக உயிரை கொடுப்போம்...

இந்த மாதிரியான கீழ்த்தரமான ஈனத்தனமான வேலை.... இதை ரொம்ப கடுமையான வார்த்தையில் சொல்லனும்னா வேற ஒரு தொழில் இருக்கு.. அந்த தொழிலை செய்யலாம்னு சொல்லலாம்...

எம் மேல ரொம்ப பிரியமான டிவிகள் 2,3 டிவி இங்கே இருக்கு... அவங்க இதை எடுத்துப் போட்டு உலகம் பூராவும் என்னை டேமேஜ் பண்ணிடுவாங்க... பயப்பட வேண்டியிருக்கு உங்களுக்கு...

நான் இதைவிட இன்னொரு தொழில் பண்ணலாமேன்னு கேட்டுறலாம்..அது என்ன தொழில்னு சொல்றாங்க.. தறி நெசவா இருக்கும்... உழுவதா இருக்கும்...உழவு செய்யறதா இருக்கும்...பிசினஸ் பண்றதா இருக்கும்...

வேற ஒரு தொழில்... உலகம் பூராவும் பிரசித்தி பெற்று ஆதி மனிதன் காலத்தில் இருக்கிற ஒரு தொழில்... அதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பல பேர் கேட்டு கொண்டிருக்கிறார்கள்.... அந்த தொழிலை செய்யலாம் இவங்க ...

கலைஞரும் செய்யலாம்.. இவங்களும் செய்யலாம்.... நா...நான் ஒன்னும் தப்பா சொல்லலைங்க... அவரு நாதஸ்வரம் வாசிக்கக் கூடிய தொழிலும் தெரியும்...

அதனால சொன்னேன்...ஒன்னும் இழிவா சொல்லலை... உலகத்தின் தலைசிறந்த இசை தமிழிசை. அதுக்குதான் உயர்வா சொல்றேன் அண்ணன் கலைஞரை என பேசினார்.

மூலக்கதை