அதிக உடல் எடை கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை சரிவு: ஆய்வில் வெளியான தகவல்

COOL SWISS  COOL SWISS
அதிக உடல் எடை கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை சரிவு: ஆய்வில் வெளியான தகவல்

சுவிட்சர்லாந்தில் 3 முக்கிய நகரங்களில் அமைந்துள்ள பாடசாலைகளில் பயின்று வரும் மாணாக்கர்கள் அதிக உடல் எடை கொண்டவர்கள் என கூறப்படுகிறது.

இதுகுறித்து பெர்ன், பஸெல் மற்றும் சூரிச் நகரங்களில் கடந்த 10 ஆண்டுகளாக சுவிஸ் சுகாதார மேம்பாட்டு மையம் இந்த ஆய்வினை நடத்தி வந்துள்ளது.

கடந்த 2014/15 ஆம் ஆண்டுகளில் மட்டும் பாடசாலை மாணாக்கர்களில் 17.3 விழுக்காடு பேர் அதிக உடல் எடை கொண்டவர்களாக இருந்துள்ளனர்.

இது கடந்த 2010 மற்றும் 11 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 20.1 விழுக்காடகவும் கடந்த 10 ஆண்டிற்கு முன்னர் அது 19.9 விழுக்காடாகவும் இருந்துள்ளது.

கடந்த கல்வியாண்டில் பாலர் குழந்தைகளில் 12 விழுக்காடு உடல் பருமனாக அல்லது அதிக உடல் எடை கொண்டவர்களாக இருந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகலுக்கு முன்னர் இது 16%.

துவக்கப் பள்ளி மாணாக்கர்களில் 21 விழுக்காடாகவும் உயர்நிலை பள்ளி மாணாக்கர்களில் இது 23 விழுக்காடாகவும் உள்ளது.

உயர்நிலை பள்ளிகளில் பயின்று வரும் மாணாக்கர்களில் நடப்பு கல்வி ஆண்டில் மட்டும் நம்பிக்கை தரும் வகையில் எண்ணிக்கை சரிந்து காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.

மூலக்கதை