உலகின் பழமையான தொழிலுக்கு வேட்டு வைக்கும் சட்டம்?!

NEWSONEWS  NEWSONEWS
உலகின் பழமையான தொழிலுக்கு வேட்டு வைக்கும் சட்டம்?!

உலகின் பழமையான தொழிலான பாலியல் தொழிலை பிரான்ஸ் நாட்டில் இருந்து ஒழிக்கும் நோக்கில் அரசு புது சட்டமொன்றை அமல்படுத்தியுள்ளது.

இதன்படி பாலியல் தொழிலாளியை நாடிச்செல்லும் நபர் ஒருவர் அந்த தொழிலாளிக்கு பணம் தருவது கண்டறியப்பட்டால் அவருக்கு 1500 முதல் 3750 யூரோ வரை அபராதம் விதிக்கப்படும்.

இந்த அபராதமானது தொடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் பின்னரே விதிக்கப்படும் எனவும் அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் சட்டத்தின் இந்த அம்சம் குறித்து தொண்டு நிறுவங்களும், சமூக ஆர்வலர்களும் கடுமையான சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.

இந்த அம்சம் சமயங்களில் அதிகாரிகளால் அல்லது பாலியல் தொழிலாளியால் கூட பழி வாங்கும் நடவடிக்கைக்கு இட்டுச் செல்லலாம் என்றுள்ளனர்.

பாலியல் உறவுக்கு தூண்டும் வகையில் ஒருவர் நடந்துகொண்டால் அவருக்கு அபராதம் விதிக்கப்படும் என அடுத்த அம்சம் குறிப்பிடுகிறது.

இதனால் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் நகரத்தை விட்டி வெளியேறும் சூழல் ஏற்படலாம் எனவும் கவற்சியான ஆடைகளை அணிவதை கட்டுப்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த அம்சமானது, சூழல் காரணமாக பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட அனைவருக்கும் உரிய பாதுகாப்பும் உதவியும் வழங்கப்படும் என புது சட்டம் உறுதி அளிக்கின்றது.

ஆனால் இதற்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதி மிக குறைவு எனவும், நாட்டிலுள்ள 40,000 பாலியல் தொழிலாளர்களுக்கு உரிய பயனை இது அளிக்காது என்றுள்ளனர்.

4-வது அம்சமாக, குறிப்பிட்ட கால அளவு முடிவுற்ற பின்னர் நாட்டிலிருந்து வெளியேற ஒப்புக்கொள்ளும் வெளிநாட்டு பாலியல் தொழிலாளர்களுக்கு,

6 மாதம் வரை நாட்டில் தங்கியிருந்து பணி புரியும் படியான அனுமதியை வழங்க அரசு முடிவுக்கு வந்துள்ளது.

பாலியல் தொழிலாளர்களை வரைமுறைப்படுத்தும் இந்த புது சட்டத்திற்கு பிரான்ஸ் நாட்டில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

மூலக்கதை