பறக்கும் தட்டு விபத்துக்குள்ளான பகுதியில் ஸ்வஸ்திகா சின்னம்!

NEWSONEWS  NEWSONEWS
பறக்கும் தட்டு விபத்துக்குள்ளான பகுதியில் ஸ்வஸ்திகா சின்னம்!

மெக்சிகோவின் Roswell பகுதியின் 70 மைல்கள் தொலைவில் வித்தியாசமான காட்சிகள் காணப்பட்டதாக புது தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த பகுதியானது கடந்த 1947ஆம் ஆண்டு பறக்கும் தட்டு போன்ற ஒன்று விபத்துக்குள்ளானதில் இருந்து பிரபலமடைந்த பகுதியாகும்.

இங்கு காணப்பட்ட வித்தியாசமான காட்சியில் நாஜிக்களின் சின்னங்களும் இருந்ததாக கூறப்படுகிறது.

பறக்கும் தட்டு விபத்துக்குள்ளானதாக கூறப்படும் பகுதியில் ஸ்வஸ்திகா சின்னம் இருப்பதாக பல்வேறு கருத்துகள் வெளியான வண்ணம் இருந்தது.

இந்நிலையில் இணையத்தளம் ஒன்று அப்பகுதியில் ஸ்வஸ்திகா மட்டுமின்றி வேறு பல நாஜிக்களின் சின்னங்களும் இருப்பதை உறுதி செய்துள்ளது.

மேலும், அப்பகுதியில் வேற்றுகிரகவாசிகள் தொழுகை நடத்திருக்கலாம் எனவும் அதனால் இதுபோன்ற சின்னங்கள் அங்கு காணப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மெக்சிகோ பகுதியில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இதுபோன்ற சின்னங்கள் காணப்படுவதால் இது வேற்றுகிரகத்தினரின் வேலை அல்ல என அங்குள்ள பெரும்பாலான மக்கள் தெரிவிக்கின்றனர்.

மூலக்கதை