60,000 கோடி ரூபாய் அளவிற்கு அதிகரித்த பணப்புழக்கம்: சட்டப்பேரவைத் தேர்தல் எதிரொலி

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
60,000 கோடி ரூபாய் அளவிற்கு அதிகரித்த பணப்புழக்கம்: சட்டப்பேரவைத் தேர்தல் எதிரொலி

சட்டப்பேரவைத் தேர்தல் எதிரொலியாக நாட்டில் 60,000 கோடி ரூபாய் அளவிற்கு பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

2016-17 நிதி ஆண்டுக்கான முதல் பணக்கொள்கையை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், தேர்தல் நேரத்தில் சாதாரணமாகவே பொதுமக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
ஆனால் 60,000 கோடி ரூபாய் அளவிற்கு அதிகரித்திருப்பது அசாதாரணமான ஒன்று.

பணப்புழக்கம் தேர்தல் நடக்கிற 5 மாநிலங்களில் மட்டுமல்லாது, அவற்றின் அண்டை மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை