மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் ரயில் சேவை இன்று தொடக்கம்

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் ரயில் சேவை இன்று தொடக்கம்

இந்திய வரலாற்றில் முதல் முறையாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் முழுமையான ஏ.சி. வசதியுடன் கொண்ட ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

டெல்லியை தாஜ் மஹால் அமைந்துள்ள உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா நகரை இணைக்கும் வகையில் செல்லும் ‘டெல்லி-ஆக்ரா கட்டிமன்’ ரயிலை ரயில்வே துறை மந்திரி சுரேஷ் பிரபு இன்று காலை தொடங்கி வைத்துள்ளார்.

இதர சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களின் கட்டணத்தைவிட இந்த ‘டெல்லி-ஆக்ரா கட்டிமன்’ ரெயிலின் கட்டணம் 25 சதவீதம் அதிகமாக இருக்கும்.

இந்த ரயிலில் உள்ள உணவகத்தில் கோதுமை உப்புமா, மினிதோசை, காஞ்சிபுரம் இட்லி, பழவகைகள், சிக்கன், முட்டை உள்ளிட்ட உணவு வகைகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐதராபாத்-சென்னை உள்பட மேலும் ஒன்பது புதிய வழித்தடங்களில் இதுபோல் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய புதிய சிறப்பு ரயில்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை