உணவுக்காக வாயை தைத்து போராட்டம் நடத்திய ஈரானிய அகதிகள்!

NEWSONEWS  NEWSONEWS
உணவுக்காக வாயை தைத்து போராட்டம் நடத்திய ஈரானிய அகதிகள்!

சிரியா, ஆப்கானிஸ்தான், ஈரானிய மக்கள் புகலிடம் தேடி ஐரோப்பிய நாடுகளை நோக்கி படையெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவ்வாறு வரும் மக்களை பிரான்ஸ் நாடு சிறிய முகாம்களை அமைத்து அதில் தங்கவைத்துள்ளது, குறிப்பாக பிரான்சின் காலின் பகுதியின் உள்ள முகாமில் தான் அதிக அளவில் அகதிகள் உள்ளனர்.

இவர்களுக்கு போதிய உணவு சரியாக கிடைக்காததால் அந்த முகாமில் உள்ள 9 ஈரானிய அதிகள் தங்களது வாயை தைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இவர்களது தேவைகளை பூர்த்தி செய்துதருகிறோம் என்றும் போராட்டத்தை முடித்துக்கொள்ளும்படியும் வழக்கறிஞர் Orsane Broissin தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, பசியால் போராடி வரும் அதிகளுக்கு அவர்களது தேவைகள் பூர்த்தி செய்யப்படும், எனவே அவர்கள் போராட்டத்தை கைவிட்டு, தங்களுக்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மாதம் NGOs எடுக்கும் சிறப்பு முயற்சியின் காரணமாக முகாம்களில் உள்ள அகதிகள் தங்குவதற்கான இடங்களில் மாற்றம் செய்யப்படும்.

800 குடியேறிகள் மற்றும் 3,050 அகதிகள் பல்வேறு ஆதாயங்களை தேடி சிரமத்துக்குள்ளாகியுள்ளனர், இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஈரானிய நபர் ஒருவர் கூறியதாவது, எங்கள் போராட்டத்தின் மூலம் நல்ல முடிவு கிடைத்துள்ளது.

சிறந்த பாதுகாப்பு, மருத்துவ வசதி, சட்ட அணுகல், நீர் மற்றும் அவசர சேவைகள் அத்துடன் சிறார்களுக்கு உதவி போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை