லண்டனில் ஈஸ்டர் வாழ்த்துச் சொன்ன கடைக்கார முஸ்லீம் நபரை 30 முறை கத்தியால் குத்திய முஸ்லீம்

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
லண்டனில் ஈஸ்டர் வாழ்த்துச் சொன்ன கடைக்கார முஸ்லீம் நபரை 30 முறை கத்தியால் குத்திய முஸ்லீம்

“ஹாப்பி ஈஸ்டர்” இந்த வார்த்தையை மட்டும் தான் பிரித்தானியாவில் உள்ள ஒரு முஸ்லீம் கடைக்காரர் பேஸ் புக் ஊடகச் சொல்லி இருந்தார். அவ்வளவு தான், அவர் தனது நியூஸ் ஏஜன் கடையை மூடிவிட்டு நடந்து வரும்போது வழிமறிக்கப்பட்டு சுமார் 30 தடவை கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் பிரித்தானியப் பொலிசாரை உலுக்கியுள்ளது. அந்த அளவு மதவேறி பிரித்தானியாவில் வேர் ஊன்றியுள்ளதா என்று பலரும் நினைக்கும் அளவு நிலமை மோசமாகியுள்ளது.

பிரித்தானியாவில் கடை ஒன்றை வைத்திருக்கும் அசாட் ஷா என்னும் 32 வயதான முஸ்லீம் நபர், மிகவும் நல்வர் என்றும். சமாதன விரும்பி என்றும் அயலவர்களால் போற்றப்படுகிறார்கள். எனது கிறீஸ்த்தவ சகோதரர்களுக்கு ஈஸ்டர் வாழ்த்துக்கள் என்று அவர் தனது பேஸ் புக்கிலும் ரிவிட்டரிலும் போஸ்ட் போட்டு உள்ளார்.

இதனை சகித்துக்கொள்ள முடியாத முஸ்லீம் தீவிரமதவாதி ஒருவர், அசாட்டை வீதியில் வைத்து கோரமாக தாக்கி கொன்றுள்ளார். இவரை தற்போது பொலிசார் கைதுசெய்துவிட்டதாக சற்று மின் கிடைத்த தகவல் ஊடாக அறியப்படுகிறது.

நேற்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றதாகவும். இவரது கடையில் வந்து பொருட்களை வாங்கும் பல கிறீஸ்த்தவர்கள் அதிர்சியில் உறைந்து போனதாகவும் கூறப்படுகிறது.

மூலக்கதை