மாணவனின் வயிற்றில் குத்து விட்ட பொலிஸ்: பழிக்குபழி வாங்கிய சக மாணவர்கள் (வீடியோ இணைப்பு)

NEWSONEWS  NEWSONEWS
மாணவனின் வயிற்றில் குத்து விட்ட பொலிஸ்: பழிக்குபழி வாங்கிய சக மாணவர்கள் (வீடியோ இணைப்பு)

பிரான்சில், சமீபத்தில் அரசாங்கம் அறிமுகப்படுத்திய தொழிலாளர் சீர்திருத்தங்களுக்கு எதிராக பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மாணவர்களை கலைந்துபோகும்படி வலியுறுத்தியுள்ளனர், இதனை மறுத்த மாணவனை 3 பொலிசார் வலுக்கட்டாயமாக பிடித்து இழக்கையில், அதில் ஒரு பொலிசார் அந்த மாணவனின் வயிற்றில் ஒங்கி குத்துவிடுகிறார்.

இதுதொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பிரான்ஸ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இந்நிலையில் சக மாணவனை தாக்கியதால் கோபம் கொண்ட மாணவர்கள், இன்று பாரிசில் உள்ள இரண்டு காவல் நிலையங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து SGP பொலிஸ் சங்கத்தின் பொதுச் செயலாளர் Nicolas Comte கூறியதாவது, மேற்கூறப்பட்ட இண்டு சம்பவங்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது, இதன் பின்னணியில் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது எனக்கூறியுள்ளார்.

மூலக்கதை