பிரான்ஸில் புகலிடம் கோரி வந்த அகதி: லொறியில் மோதி பலியான பரிதாபம்

NEWSONEWS  NEWSONEWS
பிரான்ஸில் புகலிடம் கோரி வந்த அகதி: லொறியில் மோதி பலியான பரிதாபம்

பாரீஸிற்கு அருகில் உள்ள ‘ஜங்கல்’ எனப்படும் கேலைஸ் அகதிகள் முகாமில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 22 வயதான அகதி ஒருவர் தங்கியிருந்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேறி பிரித்தானியாவில் குடியேற அவர் பலமுறை முயன்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை 6 மணியளவில் சேனல் பாதை வழியாக அவர் நடைப்பயணமாக சென்றுள்ளார்.

அப்போது எதிரே பாய்ந்து வந்த லொறி ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இந்த விபத்தில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அந்த நபர் அதே இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

நபர் மீது மோதி விட்டு தப்பிச்சென்ற லொறி ஓட்டனரை பொலிசார் தேடி வருகின்றனர்.

கடந்த யூன் மாதம் முதல் தற்போது வரை இந்த கேலைஸ் அகதிகள் முகாமில் தங்கியிருந்த 20 அகதிகளில் இதுபோன்ற விபத்துக்களில் சிக்கி பலியாகியுள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்னர் இந்த அகதிகள் முகாமில் உள்ள நபர்களை வெளியேற்றும் நடவடிக்கையை தொடர்ந்து தற்போது சுமார் 3,500 அகதிகள் இந்த முகாமில் தங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை