டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நுழைய நியூசிலாந்து பெண்கள் அணிக்கு 144 ரன்கள் வெற்றி இலக்கு

மாலை மலர்  மாலை மலர்
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நுழைய நியூசிலாந்து பெண்கள் அணிக்கு 144 ரன்கள் வெற்றி இலக்கு

மும்பை, மார்ச் 31-

5–வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த முதலாவது அரை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில், இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவரும் இரண்டாவது அரையிறுதி போட்டியில், வெஸ்ட் இண்டீஸ்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

இதனை அடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 143 ரன்கள் எடுத்தது. அந்த அணித் தரப்பில் சிறப்பாக ஆடிய பிரிட்னி கூப்பர் 42 பந்துகளில் 61 ரன்கள் குவித்து அசத்தினார். தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய ஹேய்லே மாத்யூஸ்(16), ஸ்டெபினி டெய்லர்(25) ஆகியோர் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து தரப்பில் சோபி அற்புதமாக பந்து வீசி 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

144 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டியில் நுழையலாம் என்ற நிலையில் களமிறங்கி விளையாடி வரும் நியூசிலாந்து, 9 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்கள் எடுத்துள்ளது.

மூலக்கதை