யுவராஜ் சிங் இடத்தில் யாருக்கு வாய்ப்பு? ரகானே, மனிஷ் பாண்டே இடையே போட்டி

மாலை மலர்  மாலை மலர்
யுவராஜ் சிங் இடத்தில் யாருக்கு வாய்ப்பு? ரகானே, மனிஷ் பாண்டே இடையே போட்டி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியின்போது யுவராஜ் சிங்குக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்தால் அவர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக 15 பேர் கொண்ட அணியில் மனிஷ் பாண்டே இடம் பெற்றுள்ளார். ஐ.சி.சி. தொழில் நுட்பக்குழு இதற்கு ஒப்புதல் அளித்து விட்டது.

இன்று நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் யுவராஜ் சிங் இடத்தில் யார் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. மனிஷ்பாண்டே, ரகானே, பவான் நெகி ஆகிய 3 பேர்களில் ஒருவருக்கு 11 பேர்கொண்ட அணியில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. யார் இடம் பெறுவார் என்பது பற்றி அணி நிர்வாகம் இன்றைய பயிற்சிக்கு பிறகு முடிவு செய்யும்.

மனிஷ் பாண்டே ஆக்ரோஷமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். நெருக்கடியை சமாளிப்பதில் திறமையானவர். கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் அடித்து இருந்தார். 26 வயதான அவர் நான்கு 20 ஓவர் போட்டியில் ஆடுவுள்ளார்.

15 பேர்கொண்ட அணியில் இடம் பெற்று இருக்கும் ரகானேவுக்கு இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை. அனுபவம் வாய்ந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். ஆல்ரவுண்டர் வரிசையில் இருக்கும் பவான் நெகிக்கு இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அனுபவம் குறைவு என்பதால் வாய்ப்பு குறைவே. ரகானே, மனிஷ் பாண்டே இடையே போட்டி நிலவுகிறது.

மூலக்கதை