இதுவரை இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய டி20 போட்டி விபரங்கள்

மாலை மலர்  மாலை மலர்
இதுவரை இந்தியா  வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய டி20 போட்டி விபரங்கள்

20 ஓவர் போட்டியில் இரு அணிகளும் மோதிய 4 போட்டியில் தலா 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. அதன் விவரம்:–

2009: உலககோப்பை ‘லீக்’ ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் (லண்டன்) வெற்றி.

முதலில் விளையாடிய இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்தது. வெஸ்ட்இண்டீஸ் 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்தது.

2010: உலககோப்பை ‘லீக்’ ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 14 ரன்னில் (பார்படோஸ்) வெற்றி.

முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்தது.

2011: போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த போட்டியில் இந்தியா 16 ரன்னில் வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்புக்கு 143 ரன் எடுத்தது.

2014: கடந்த உலககோப்பையில் ‘லீக்’ ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி (டாக்கா) பெற்றது.

முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 130 ரன் எடுத்தது.

இரு அணிகளும் இந்திய மண்ணில் 20 ஓவர் போட்டியில் மோதுவது இதுவே முதல் முறையாகும்.

மூலக்கதை