தமிழகத்தில் ஆட்சியை நிர்ணயிக்கும் காஞ்சீபுரம் தொகுதி

மாலை மலர்  மாலை மலர்
தமிழகத்தில் ஆட்சியை நிர்ணயிக்கும் காஞ்சீபுரம் தொகுதி

காஞ்சீபுரம் மார்ச்.31–

தமிழக சட்டமன்ற தேர்தலில் காஞ்சீபுரம் தொகுதி முக்கியத்துவம் பெற்றதாகும்.

தி.மு.க.வை உருவாக்கிய அறிஞர் அண்ணா பிறந்த ஊர் என்பது மட்டுமின்றி 1962–ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காஞ்சீபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.வி.நடேசமுதலியாரிடம் அறிஞர் அண்ணா தோல்வி அடைந்தார்.

1957–ல் இருந்து 2011 வரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் காஞ்சிபுரம் தொகுதி வெற்றி பெற்ற கட்சியே ஆட்சி அமைத்து வருகிறது.

இதுவரை வெற்றி பெற்ற அவரை அடுத்த வந்த வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள் குறித்த விவரம்:–

1957 – சிஎன். அண்ணாதுரை (தி.மு.க.) – 31,867

வெங்கடேசன் (காங்) – 20, 718

1962 – நடேச முதலியார் (காங்) – 46, 018

அண்ணாதுரை (தி.மு.க.) – 36,824

1967 – கிருஷ்ணன் (தி.மு.க.) – 45, 266

சம்மந்தநாயக்கர் (காங்) – 33, 716

1971 – சிவிஎம். அண்ணா மலை (தி.மு.க.) – 44,009

நடேசமுதலியார் (காங்) – 37, 697

1977 – கே.பாலாஜி (அ.தி.மு.க.) – 31, 327

சம்மந்தம் (தி.மு.க.) – 29, 380

1980 – வெங்கடசுப்பிர மணியர் (அ.தி.மு.க.) – 46, 051

சம்மந்தம் (தி.மு.க.) – 43, 859

1984 – கே.பாலாஜி (அ.தி.மு.க.) – 60, 363

பழனிராஜ்குமார் (தி.மு.க.) – 47, 362

1989 – முருகேசன் (தி.மு.க.) – 53, 821

திருநாவுக்கரசு (அ.தி.மு.க.) – 32, 408

1991– பட்டாபிராமன் (அ.தி.மு.க.) – 66, 429

முருகேசன் (தி.மு.க.) – 39, 163

1996 – முருகேசன் (தி.மு.க.) – 77, 723

திருநாவுக்கரசு (அ.தி.மு.க.) 45, 094

2001 – திருநாவுக்கரசு (அ.தி.மு.க.) – 84, 246

சேகர் (தி.மு.க.) – 60, 643

2005–ம் ஆண்டு திருநாவுக்கரசு எம்.எல்.ஏ. மரணமடைந்ததால் அவரின் மனைவி மைதிலி காஞ்சீபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்டார்.

2005 (இடைத்தேர்தல்)

மைதிலி (அ.தி.மு.க.) – 87,274

குமார் (தி.மு.க.) – 69,626

2006 – சக்தி கமலாம்பாள் (பா.ம.க.) – 81,366

2011 – வி.சோமசுந்தரம் (அ.தி.மு.க.) 1, 02,710

உலகரட்சகன் (பா.ம.க.) 76,993

கடந்த 2 பொதுத் தேர்தல்களிலும் தி.மு.க. அணியிலிருந்த பா.ம.கா.விற்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டது. தற்போது பாமக தனியாக களம் காண்பதால் 10 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. காஞ்சீபுரத்தில் போட்டியிடும் நிலையில் உள்ளது.

மூலக்கதை