8 வயது சிறுவனை விமான நிலையத்தில் சிறை வைத்த அதிகாரிகள்: காரணம் என்ன?

NEWSONEWS  NEWSONEWS
8 வயது சிறுவனை விமான நிலையத்தில் சிறை வைத்த அதிகாரிகள்: காரணம் என்ன?

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள Comoros என்ற தீவில் தாயார் ஒருவர் தனது 8 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார்.

குடும்பம் வறுமையில் வாடியதால் தனது மகனாவது நல்ல வாழ்க்கையை அனுபவிக்கட்டும் என நினைத்த தாயார் சிறுவனை பிரான்ஸ் நாட்டில் உள்ள உறவினர்களிடம் அனுப்ப முடிவு செய்தார்.

இதனை தொடர்ந்து உறவினர் ஒருவரின் கடவுச்சீட்டை பயன்படுத்தி சிறுவனை தனியாக விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

பாரீஸில் உள்ள Roissy-Charles de Gaulle என்ற விமான நிலையத்திற்கு கடந்த மார்ச் 21ம் திகதி விமானம் வந்துள்ளது.

ஆனால், சிறுவனை பரிசோதித்து சந்தேகம் அடைந்த விமான அதிகாரிகள் அவனை அங்குள்ள ஒரு தடுப்பு முகாமில் ஒரு வார காலமாக அடைத்து வைத்துள்ளனர்.

’சிறுவனை விமான நிலையத்திலேயே வைத்திருப்பது சிறுவனது பாதுகாப்பிற்கும் அவசியமானது’ என நீதிமன்றமும் பரிந்துரை செய்துள்ளது.

ஆனால், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த குழந்தைகள் நல சங்கம் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

குழந்தைகள் நல வழக்கறிஞரான Catherine Daoud என்பவர் பேசியபோது, ‘தனியாக வந்த 8 வயது குழந்தையை ஒரு வாரத்திற்கும் அதிகமாக தடுப்பு முகாமில் அடைத்து வைத்திருந்தது சர்வதேச குழந்தைகள் நல சட்டங்களுக்கு எதிரானது ஆகும்.

’எனது மகனை என்னிடமே அனுப்பி விடுங்கள்’ என சிறுவனின் தாயார் கோரிக்கை விடுத்திருப்பதால், அந்த சிறுவனை உடனடியாக தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

பல்வேறு எதிர்ப்புகளை தொடர்ந்து சிறுவனை பாதுகாப்பாக தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்ப பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மூலக்கதை