மாவோயிஸ்டு தீவிரவாதி கோபி கோர்ட்டில் ஆஜர்

மாலை மலர்  மாலை மலர்
மாவோயிஸ்டு தீவிரவாதி கோபி கோர்ட்டில் ஆஜர்

கோபி, மார்ச்.31–

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ரூபேஷ். மாவோயிஸ்டு தீவிரவாதியான இவர் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது கோவை மத்திய சிறையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 12–12–2015 அன்று கோபியை சேர்ந்த முகமது விலால் என்பவர் கோபி போலீசில் புகார் செய்தார். அதில் தனது வாக்காளர் அட்டையை தவறாக பயன்படுத்தி மாவோயிஸ்டு தீவிரவாதி ரூபேஷ் சிம் கார்டு வாங்கி வைத்திருப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்த வழக்கு விசாரணை கோபி முதலாம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்று நடந்தது.

இதனால் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக ரூபேஷை கோவை மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேனில் கோபி கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டார்.

பின்னர் கோர்ட்டில் நீதிபதி பாரதி முன்னிலையில் ரூபேஷை போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி பாரதி, விசாரணையை வருகிற 13–ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

பின்னர் ரூபேஷை போலீசார் பாதுகாப்பாக கோர்ட்டில் இருந்து கோவை மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.

மாவோயிஸ்டு தீவிரவாதி கோபி கோர்ட்டில் ஆஜரானதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மூலக்கதை