கோவையில் நடுரோட்டில் குடிபோதையில் தள்ளாடிய சப்–இன்ஸ்பெக்டர்

மாலை மலர்  மாலை மலர்
கோவையில் நடுரோட்டில் குடிபோதையில் தள்ளாடிய சப்–இன்ஸ்பெக்டர்

கோவை, மார்ச்.31–

கோவை சூலூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சங்கர் குமார்.

இவர் நேற்று இரவு கோவை சுங்கம் பைபாஸ் சாலையில் மதுபோதையில் விழுந்து கிடந்தார். தனது மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்தியிருந்த அவர் உளறியபடியே படுத்துக்கிடந்தார்.

பின்னர், செல்போனில் யாருடனோ நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் எழுந்து மோட்டார் சைக்கிளை இயக்க முயன்றார். ஆனால் அவரால் எழுந்து நிற்கக் கூட முடியாத நிலையில் இருந்தார்.

சீருடை அணிந்த நிலையில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் போதையில் தள்ளாடியபடி படுத்துக் கிடப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நீண்ட நேரத்திற்கு பிறகு அவர் அங்கிருந்து சென்று விட்டார்.

சப்–இன்ஸ்பெக்டர் சங்கர் குமாரின் இந்த செயல் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரம்யாபாரதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார்.

சங்கர்குமார் பணி முடிந்து வீட்டுக்கு சென்ற போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. எனினும் சீருடை அணிந்த நிலையிலேயே பொது இடத்தில் போதையில் தள்ளாடியதால் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

மூலக்கதை