இறுதிப் போட்டிக்குள் நுழையப் போவது யார்?: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச முடிவு

மாலை மலர்  மாலை மலர்
இறுதிப் போட்டிக்குள் நுழையப் போவது யார்?: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச முடிவு

புதுடெல்லி, மார்ச் 30-

6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்-10 சுற்று நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது. இதன் முடிவில் குரூப்1-ல் வெஸ்ட் இண்டீஸ் (6 புள்ளி), இங்கிலாந்து (6 புள்ளி), குரூப்2-ல் நியூசிலாந்து (8 புள்ளி), இந்தியா (6 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தன. நடப்பு சாம்பியன் இலங்கை, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட எஞ்சிய 6 அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து மூட்டையை கட்டின.

இந்த நிலையில் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று (புதன்கிழமை) இரவு அரங்கேறும் முதலாவது அரையிறுதியில் நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இரு அணிகளும் சமப்பலத்துடன் விளங்குவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார். இரண்டாம் பாதி ஆட்டத்தில் பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் முதலில் பந்து வீச முடிவு செய்ததாக மோர்கன் தெரிவித்துள்ளார். ஆனால் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், ‘நாங்கள் டாஸ் வென்று இருந்தால் முதலில் பேட்டிங்கை தான் தேர்வு செய்திருப்போம்’ என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அணி விபரம்:

நியூசிலாந்து: மார்டின் கப்தில், கேன் வில்லியம்சன், கொலின் முன்ரோ, ராஸ் டெய்லர், கோரி ஆண்டர்சன், எலியட், ரோன்ச், மிட்செல் சான்ட்னெர், சோதி, மிட்செல் மெக்லேனகன், ஆடம் மில்னே.

இங்கிலாந்து: ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், இயான் மோர்கன், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத், டேவிட் வில்லி, லியாம் பிளங்கெட்.

மூலக்கதை