டோனி மகளுடன் விராட் கோலி இருக்கும் அசத்தல் செல்பி: வைரலாக மாறிய புகைப்படம்

மாலை மலர்  மாலை மலர்
டோனி மகளுடன் விராட் கோலி இருக்கும் அசத்தல் செல்பி: வைரலாக மாறிய புகைப்படம்

புதுடெல்லி, மார்ச் 30-

இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் செல்ல மகள் ஷிவாவுடன் செல்பி எடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார் விராட் கோலி.

இந்த செல்பியில் விராட் கோலி கண்களை விரித்து அசத்தலாக போஸ்கொடுக்க, ஷிவா கோலியின் போனில் தீவரமாக யாருடனோ பேசிக்கொண்டிருப்பது போல் போஸ் கொடுத்துள்ளார். செல்பிக்கு கீழ் “டோனியின் மகள் ரொம்ப அழகு” என்று கோலி கூறியுள்ளார்.

இந்த செல்பியை நேற்று இரவு கோலி தனது இன்ஸ்டகிராமில் பதிவேற்றினார். இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். சுமார் 5000 பேருக்கு அதிகமானோர் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

மூலக்கதை