மதுரை ஊரகப்பகுதியில் தேர்தல் முன்எச்சரிக்கையாக 1,375 பேர் கைது

மாலை மலர்  மாலை மலர்
மதுரை ஊரகப்பகுதியில் தேர்தல் முன்எச்சரிக்கையாக 1,375 பேர் கைது

மதுரை, மார்ச். 30–

மதுரை புறநகர் பகுதியில் தேர்தல் முன் எச்சரிக்கையாக 1,375 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரி கூறியதாவது:–

தேர்தல் நன்னடத்தை அமுலுக்கு வந்த நாள் முதல் நேற்று வரை மதுரை புறநகர் பகுதிகளில் தேர்தல் விதிமுறையை மீறி பொது இடங்களில் விளம்பர பலகைகள் வைத்தது மற்றும் சுவர் விளம்பரம் செய்தது தொடர்பாக 318 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் சட்டவிரோதமாக மது விற்றதாக 124 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மின் திருட்டு சம்பந்தமாக ஒரு வழக்கும், தேர்தல் நடத்தை விதியை மீறியதாக 6 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்சி கொடி மற்றும் தலைவர்கள் படங்கள் ஒட்டி இருந்த 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தேர்தல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 498 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,375 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை புறநகர் பகுதிகளில் 647 வழக்குகளில் இதுவரை 272 வழக்குகளுக்கு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளை கோர்ட்டு நடவடிக்கைகளுக்கு கொண்டு வர 9 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை