மீண்டும் தனுஷ் படத்தை வாங்கி வெளியிடும் லைக்கா நிறுவனம்

மாலை மலர்  மாலை மலர்
மீண்டும் தனுஷ் படத்தை வாங்கி வெளியிடும் லைக்கா நிறுவனம்

தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த ‘நானும் ரவுடிதான்’, ‘விசாரணை’  ஆகிய படங்களை லைக்கா நிறுவனம் வெளியீட்டு உரிமையை வாங்கி வெளியிட்டது. இரண்டு படங்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றன. அந்த வரிசையில் தனுஷ் நடித்த வரும் ‘கொடி’ படத்தின் வெளியீட்டு உரிமையையும் தற்போது லைக்கா நிறுவனம் வாங்கியுள்ளது.

தனுஷ் நடித்து வரும் ‘கொடி’ படத்தை துரை.செந்தில்குமார் இயக்கி வருகிறார். இவர் சிவகார்த்திகேயனை வைத்து ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச்சட்டை’ ஆகிய படங்களை இயக்கியவர். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக த்ரிஷா, அனுபமா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை தனுஷ் தனது சொந்த தயாரிப்பில் தயாரித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் வாங்கியுள்ளது. மேலும், இப்படத்தை ஜுலை 6-ந் தேதி வெளியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மூலக்கதை