தெறி டிரைலர்: விஜய்யை பாராட்டிய ரஜினி

மாலை மலர்  மாலை மலர்
தெறி டிரைலர்: விஜய்யை பாராட்டிய ரஜினி

ரஜினி ‘கபாலி’ படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், ஷங்கர் இயக்கும் ‘2.ஓ’ படத்தில் பங்கேற்று வருகிறார். இதற்கிடையே நேரம் கிடைக்கும் போது இளம் நடிகர்களின் புதிய படங்கள் மற்றும் டிரைலர்களையும் பார்க்கிறார். அது பற்றிய தனது நல்ல கருத்துக்கை கூறி இளம் நடிகர்– நடிகைகளை ஊக்குவித்து வருகிறார். அவர்களை பாராட்டவும் ரஜினி தவறுவதில்லை.

சமீபத்தில் விஜய்யின் ‘தெறி’பட டிரைலர் ரஜினி பார்த்தார். அதை மிகவும் ரசித்த ரஜினி உடனே விஜய், தெறி பட இயக்குனர் அட்லி ஆகியோருக்கு போன் செய்து பாராட்டியுள்ளார். டிரைலரில் அவர் பார்த்த நல்ல அம்சங்களையும், தன்னை ஆர்ச்சயப்படுத்திய விஷயங்களையும் குறிப்பிட்டு அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேசி இருக்கிறார். இதனால் விஜய் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ரஜினியின் பாராட்டு தங்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

மூலக்கதை