அகதிகளுக்காக ஒதுக்கிய 5,00,000 டொலர் பணத்தை சூதாடி இழந்த பாதிரியார்: கனடாவை அதிர வைத்த மோசடி

NEWSONEWS  NEWSONEWS
அகதிகளுக்காக ஒதுக்கிய 5,00,000 டொலர் பணத்தை சூதாடி இழந்த பாதிரியார்: கனடாவை அதிர வைத்த மோசடி

ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரில் St. Joseph Chaldean என்ற கத்தோலிக்க தேவாலயம் இயங்கி வருகிறது.

ஈராக் நாட்டை பூர்வீகமாக கொண்ட இந்த தேவாலயத்திற்கு வரும் ஈராக் நாட்டு பாதிரியார்கள் மற்றும் அகதிகளுக்கு தகுந்த உதவிகள் செய்து தரப்படும்.

இந்த தேவாலயத்தில் அமீர் சாகா என்பவர் பாதிரியாராகவும், இமானுவேல் ஷாலேடா என்பவர் மதகுருவாகவும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், ஈராக் நாட்டிலிருந்து புகலிடம் கோரி வந்த சுமார் 20 அகதிகளின் தேவைகளுக்காக 5,00,000 டொலர் பணம் பாதிரியார் அமீர் சாகாவின் வங்கி கணக்கிற்கு சில மாதங்களுக்கு முன்னர் மாற்றப்பட்டுள்ளது.

ஆனால், இந்த தொகை அனைத்தையும் அவர் சூதாட்டத்தில் வைத்து செலவளித்துள்ளதாக தற்போது புகார்கள் எழுந்துள்ளது.

இதுமட்டுமில்லாமல், மதகுருவிடம் தனது தவறுகளை பாதிரியார் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த மோசடி பற்றி மதகுரு பேசியபோது, ‘அகதிகள் பாதிரியாரை மிகவும் நம்பினார்கள். இந்த பணத்தை அவருக்கு அன்பளிப்பாக ஒன்றும் அளிக்கவில்லை.

ஆனால், அந்த நம்பிக்கையை பாதிரியார் கெடுத்துவிட்டார். எனினும், இது அவருடைய தனிப்பட்ட நடவடிக்கை என்றும், அவரது செயலுக்கும் தேவாலாயத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது’ என கூறியுள்ளார்.

அகதிகளுக்காக ஒதுக்கிய பணத்தை பாதிரியார் மோசடி செய்துள்ளதாக எழுந்துள்ள இந்த புகார்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

மூலக்கதை