கமலுக்கு அடுத்த இடம் பிடித்த கார்த்தி

மாலை மலர்  மாலை மலர்
கமலுக்கு அடுத்த இடம் பிடித்த கார்த்தி

தமிழ் பட உலகில் பேசப்படும் ஹீரோவாக இருப்பவர் கார்த்தி. இவர் நாகார்ஜுனா, தமன்னா ஆகியோருடன் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்துள்ள ‘தோழா’ படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாரான இந்த படம், தெலுங்கில் ‘ஊப்பரி’ என்ற பெயரில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. கார்த்தி நடித்த படங்கள் ஏற்கனவே தெலுங்கு ‘டப்பிங்’ செய்யயப்பட்டுள்ளன. என்றாலும், அவர் நேரடியாக தெலுங்கில் நடித்த முதல்படம் இதுதான்.

இந்த படத்துக்கு தெலுங்கிலும் அங்குள்ள ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவை அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தெலுங்கு பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள் கார்த்தியை மிகவும் பாராட்டியுள்ளன. நாகார்ஜுனாவை விட கார்த்தி நடிப்பு யதார்த்தமாக இருக்கிறது என்று பாராட்டி உள்ளனர்.

சூர்யாவும் அவரது தம்பியை பாராட்டி இருக்கிறார். இதன் மூலம் கார்த்தி தெலுங்கு ரசிகர்கள் மனதில் முக்கிய நாயகனாக இடம் பிடித்திருக்கிறார். தமிழ் நடிகர்களில் கமல்ஹாசனுக்கு தெலுங்கில் ஏற்கனவே தனி இடம் உண்டு.

இப்போது ‘தோழா’ படத்தின் மூலம் கார்த்தியும் கமலுக்கு அடுத்த இடத்தை தொட்டு விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை