கனடா கடல் பகுதியில் எரிவாய் எடுக்க திட்டமிடும் அமெரிக்கா: வலுக்கும் எதிர்ப்புகள்

NEWSONEWS  NEWSONEWS
கனடா கடல் பகுதியில் எரிவாய் எடுக்க திட்டமிடும் அமெரிக்கா: வலுக்கும் எதிர்ப்புகள்

ஆர்டிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள Beaufort கடல் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது.

கனடா இப்பகுதியை தனது எல்லையின் ஒரு பகுதியாக கூறி வருகிறது. இந்நிலையில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவை எடுப்பதற்காக இந்த கடலில் துளையிட்டுகொள்வது தொடர்பான புதிய குத்தகை அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் பெருங்கடல் சக்தி மேலாண்மை அமைப்பு (BOEM) தனது 2017 முதல் 2020ஆம் ஆண்டு வரையான திட்டம் தொடர்பான அறிவிப்பில் இது குறித்து தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக திட்டம் செயல்படுத்தும் பகுதிகளில் உள்ள மக்களிடம் ஆலோசனை நடத்தவும் BOEM திட்டமிட்டுள்ளது

இந்நிலையில் இது கனடாவின் இறையாண்மையை மீறும் செயல் என கனடாவின் யுகொன் மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக யுகொன் நீதித்துறை அமைச்சர் ப்ராட் காத்தர்ஸ் கூறுகையில், அமெரிக்காவின் இந்த செயல் கனடாவின் இறையான்மையை மீறும் செயல்.

குறிப்பிட்ட அந்த பகுதி யுகொன் மற்றும் கனடாவுக்கே சொந்தம் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், எல்லை தொடர்பான பிரச்சனைக்கு முடிவு கிட்டும் வரையில் அமெரிக்கா எந்த திட்டத்தையும் செயல்படுத்த கூடாது என்று யுகொன் மாகாணத்தின் பிரீமியர் Darrell pasloski பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை