செக்ஸ் வீடியோ வெளியான வழக்கு: மல்யுத்த வீரருக்கு ரூ.700 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
செக்ஸ் வீடியோ வெளியான வழக்கு: மல்யுத்த வீரருக்கு ரூ.700 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

செக்ஸ் வீடியோ வெளியான வழக்கில் மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகனுக்கு ரூ.700 கோடி இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொலைக்காட்சிகளில் மிகப் பிரபலமான நிகழ்ச்சியான “WWE” மல்யுத்தப் போட்டிகளில் முன்னர் ஜாம்பவான் ஹல்க் ஹோகனின் அந்தரங்க வீடியோ கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹல்க், தனது நெருங்கிய நண்பரின் மனைவியுடன் படுக்கையில் உல்லாசமான இருந்த வீடியோவை அமெரிக்காவின் பிரபல இணையதளமான “காக்கர்” வெளியிட்டது.

இந்த வீடியோவால் தனது கவுரவம் பாதிக்கப்பட்டதாகவும், தனக்கு ஏற்பட்டமானநஷ்ட இழப்பீட்டு தொகையாக நூறு மில்லியன் (பத்து கோடி) டாலர்களை அந்த இணையதளம் வழங்க வேண்டும் என்றும் புளோரிடா மாநிலத்தின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஹல்க் ஹோகன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்திற்கு வந்த ஹல்க், தனது அந்தரங்க வீடியோ வெளியானதால் தொழில்ரீதியாக பெரிய இழப்பும், தனிப்பட்ட முறையில் பெரும் மன உளைச்சலும் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, எனது அந்தரங்கம் தொடர்பான அந்த வீடியோ வெளியானதால் நான் மிகுந்த அவமானத்துக்கு ஆளானேன். எனது வாழ்க்கையே தடம்புரண்டு விட்டது என்று செய்தியாளர்களுக்கு ஹல்க் பேட்டியளித்தார். அவருக்கு தற்போது 62 வயது.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில் நீதிபதி, ஹல்க்கின் அந்தரங்க உறவு தொடர்பான செக்ஸ் டேப் வெளியானதால் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக 60 மில்லியன் (ஆறு கோடி) டாலர்களும், தொழில்ரீதியான பாதிப்பு மற்றும் அதுதொடர்பான பொருளாதார இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் 55 மில்லியன் (ஐந்தரை கோடி) டாலர்களையும் வழங்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக “காக்கர்” இணையதளம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை