பாரீஸில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்: பெரும் ஆபத்தை அதிரடியாக முறியடித்த பொலிசார்

NEWSONEWS  NEWSONEWS
பாரீஸில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்: பெரும் ஆபத்தை அதிரடியாக முறியடித்த பொலிசார்

பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Bernard Cazeneuve நேற்று பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘நேற்று மாலை 5.30 மணியளவில் பாரீஸிற்கு அருகே உள்ள Argenteuil என்ற பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ரகசிய தகவல்கள் வந்துள்ளன.

இதனை தொடர்ந்து பொலிசார் படையை அப்பகுதிக்கு அனுப்பி கண்காணித்ததில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த நபர் பிரான்ஸ் நாட்டு குடிமகன் என்றும், இவரை பற்றி ஏற்கனவே உளவு நிறுவனங்களுக்கு தகவல் கிடைத்ததால், அவரை கடந்த சில வாரங்களாக ரகசியமாக கண்காணித்து வந்தோம்.

நேற்று மாலையில் தாக்குதல் உறுதியானதை தொடர்ந்து, காலதாமதம் ஏற்படுத்தாமல் அவரை சுற்றி வளைத்து கைது செய்துவிட்டதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபருக்கும் கடந்த நவம்பர் மாதம் பாரீஸில் நடந்த தாக்குதலுக்கும் அல்லது பிரஸ்சல்ஸில் நடந்த தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து இதுவரை தெரியவரவில்லை.

கைது செய்யப்பட்டுள்ள நபரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருவதாக உள்துறை அமைச்சர் தகவல் அளித்துள்ளார்.

மூலக்கதை