மூன்றாவது பாலினமாக அறிவிக்க கோரி வழக்கு தொடர்ந்த நபர்: மறுத்த பிரான்ஸ் நீதிமன்றம்!

NEWSONEWS  NEWSONEWS
மூன்றாவது பாலினமாக அறிவிக்க கோரி வழக்கு தொடர்ந்த நபர்: மறுத்த பிரான்ஸ் நீதிமன்றம்!

கிழக்கு பிரான்சில் தனது மனைவி மற்றும் வளர்ப்பு மகளுடன் வசித்து வரும் 64 வயது முதியவர், ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புடன் பிறந்துள்ளார்.

இவரது, தனிப்பட்ட ஆவணங்கள் அனைத்திலும் ஆண் பாலர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அம்முதியவர் தனது பாலினத்தை மூன்றாவது பாலினமாக அறிவிக்கும்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இவ்வழக்கு விசாரித்த நீதிமன்றம், பிரான்ஸ் நாட்டு சட்டப்படி மூன்றாவது பாலினம் என்பது கிடையாது என்று கூறி, அந்த வழக்கினை நிராகரித்துள்ளது.

இது ஒரு பொது பிரச்சினை, மற்றும் பாலியல் வளர்ச்சி மாறுபாடு குறித்து மக்களின் தனிப்பட்ட வாழ்வில் மரியாதை செலுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்ட இதனை நிராகரித்துள்ளது.

ஜேர்மன், நியூசிலாந்து, இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் மூன்றாவது பாலினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

மூலக்கதை