நீரிழிவு பற்றி சிறார்களுக்கு விழிப்புனர்வு தரும் ‘ரோபோ’

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
நீரிழிவு பற்றி சிறார்களுக்கு விழிப்புனர்வு தரும் ‘ரோபோ’

லண்டன், மார்ச்.4-

நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்ற சிறார்களுக்கு, அந்த நோயின் அறிகுறிகள் பற்றி அறிவூட்டும் முயற்சியாக ரோபோ ஒன்று உருவாக்கப்படுகின்றது.

7 வயது முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு உதவக்கூடிய வகையிலான இந்த ரோபோவை பிரிட்டனில் உள்ள ஹெர்ட்ஃபோட்ஷைர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்குகின்றனர்.

ரோபோக்களை சிறார்கள் அதிகம் விரும்புவதால், நீரிழிவு நோயின் அறிகுறிகள் உள்ளதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோவை, எவ்வாறு கவனித்துக் கொள்ள வேண்டும் எனச் சிந்தித்து செயற்படும் சிறார்கள், அதுபற்றிய அறிவைப் பெறுவார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதன்மூலம், தமது வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் இயங்க பிள்ளைகள் பழகிக் கொள்வார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

மூலக்கதை