'எந்த நேரத்திலும் தாக்குதல்: அணுவாயுங்களைத் தயாராக வையுங்கள்!' –கிம் ஜோங் உன

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
எந்த நேரத்திலும் தாக்குதல்: அணுவாயுங்களைத் தயாராக வையுங்கள்! –கிம் ஜோங் உன

பியோங் யாங், மார்ச் 4-

எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடிய வகையில் நாட்டின் அணுவாயுதங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நிலவிவரும் இராணுவ முனைப்புகளைச் சீரமைத்து, முன்கூட்டியே தாக்குதல் தொடுக்கத்தக்க வகையில் தயார்படுத்த வேண்டும் என்று இராணுவத் தலைவர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அண்மையில் வட கொரியா மேற்கொண்ட அணுவாயுதச் சோதனைகள், ஏவுகணைச் சோதனைகள் ஆகியவை தொடர்பில் அந்நாட்டின் மீது ஐநா பொருளாதாரத் தடை விதித்திருக்கும் நிலையில், கிம் ஜோங் உன் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார்.

நேற்று மேலும் 6 ஏவுகணைச் சோதனைகளை வட கொரியா நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நம்முடைய அணு ஏவுகணைகளை எந்த நேரத்திலும் பாய்ச்ச நாம் தயார்படுத்தி வைக்க வேண்டும். ஏனெனில், நம்முடைய எதிரிகள் நமக்கு கடும் மிரட்டலாக விளங்குகிறார்கள் என்று கிம் ஜோங் உன் சொன்னார்.

இதர நாடுகள் மீதும் மக்கள் மீதும் போரை அமெரிக்கர்கள் கட்டவிழ்த்து விடும் ஓர் உச்சக்கட்ட நேரத்தில், நம்முடைய தன்னாட்சி உரிமையையும் நம்முடைய வாழ்க்கையையும் காக்கப் போவது நமது அணுவாயுதத் திறன் தான் என்றார் அவர்.

எனினும் இது போது இரத்தம் தெறிக்கப் பேசுவது வட கொரியாவுக்கு வழக்கமான ஒன்றுதான் என்று ஆய்வாலர்கள் கருத்துரைத்தனர். தன்னுடைய ஏவுகணைகளில் சிறிய அளவிலான அணுவெடி முனையைக் கூட பொருத்தக்கூடிய திறன் அதற்கு உண்டா? என்பது சந்தேகமே என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

 

 

 

மூலக்கதை