ஆஸ்கார் விருதை ஹோட்டலில் விட்டுச் சென்ற டி காப்ரியோ

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
ஆஸ்கார் விருதை ஹோட்டலில் விட்டுச் சென்ற டி காப்ரியோ

ஹாலிவுட் நடிகர் டி கேப்ரியோ தனக்கு வழங்கப்பட்ட ஆஸ்கர் விருதை ஹோட்டலில் மறந்து விட்டுச் செல்லும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் திரையுலகின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அண்மையில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகர் விருதை ‘தி ரெவனன்ட்’ படத்தில் நடித்த லியனார்டோ டி கேப்ரியோ பெற்றார்.

இந்நிலையில் ஹாலிவுட்டில் டால்ஃபி தியேட்டரில் நடந்த விருது நிகழ்ச்சிக்கு பிறகு, அங்குள்ள எகோ என்ற ஹோட்டலுக்கு டி கேப்ரியோ சென்றார். பின்னர் ஹோட்டலில் இருந்து வெளியேறி டி கேப்ரியோ காரில் ஏறும்போது, ஒருவர் ஓடிவந்து ஆஸ்கர் விருதை அவரிடம் தரும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

 

அப்போது அந்த நபர் டி கேப்ரியோவிடம் “இது உங்களுடன் இருப்பதில் உங்களுக்கு விருப்பம்தானே?” என்று கேட்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

மூலக்கதை