தி.மு.க.வுடன் கூட்டணி சேர்கிறார் நடிகர் கார்த்திக்!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
தி.மு.க.வுடன் கூட்டணி சேர்கிறார் நடிகர் கார்த்திக்!

சென்னை, மார்ச். 3–

நடிகர் கார்த்திக் அடுத்து வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டுச் சேர்வதில் தீவிரம் காட்டி வருகிறார்.நீண்டகாலமாகவே அரசியலில் கால்பதிக்கப் போராடிவரும் கார்த்திக், இம்முறை திமுகவுடன் கூட்டணி சேர்ந்து வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைப் பெற முயன்றுவருகிறார்

நடிகர் கார்த்திக் 2006ஆம் ஆண்டு அரசியலில் குதித்தார். அவருக்கு பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் பதவி கிடைத்தது.

2006இல் சட்டசபைத் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சி 111 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது. ஆனால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் மனம் உடைந்த கார்த்திக் 2008–இல் ‘நாடாளும் மக்கள் கட்சி’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.

இந்தக் கட்சி சார்பில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். கடந்த சட்டசபைத் தேர்தலில் 29 தொகுதிகளில் இவரது கட்சி தனித்துப் போட்டியிட்டது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்தார். அந்த கட்சிக்காக தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார்.

 அடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி சேர கார்த்திக் முடிவு செய்திருப்பதாகவும் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிகிறது.

தி.மு.க. கூட்டணியில் தனது கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ள 10 தொகுதிகளை கார்த்திக் கேட்பதாகவும் சொல்லப்படுகிறது. எத்தனை தொகுதிகள் என்பது பேச்சுவார்த்தைக்கு பிறகு சுமூகமாக முடிவு செய்யப்படும் என்று அவரது கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

வருகிற 6 ஆம் தேதி நெல்லையில் கார்த்திக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அப்போது தி.மு.க.வுடன் கூட்டணி சேர்வது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

மூலக்கதை