ஐஸ்வர்யா தனுஷ் தாயரிக்கும் 'சினிமா வீரன்'

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா

சென்னை, பிப்.27-

ஐஸ்வர்யா தனுஷ் புதிய ஆவணப் படம் ஒன்றைய இயக்குகிறார். சினிமா வீரன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் இந்தப் படத்துக்கான வர்ணனையைத் (வாய்ஸ் ஓவர்) தரவுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ், '3' படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து கௌதம் கார்த்திக் நாயகனாக 'வை ராஜா வை' படத்தை இயக்கினார்.

தற்போது, சினிமாவில் பணியாற்றும் சண்டைப் பயிற்சியாளர்கள் பற்றிய ஆவணப் படம் ஒன்றை இயக்குகிறார். பொதுமக்களுக்கு அதிகம் தெரியாத, புகழ் வெளிச்சத்துக்கு வராத ஸ்டண்ட் கலைஞர்களுக்கு அர்ப்பணிப்பாக இந்தப் படம் இருக்கும் என ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்துள்ளார்.

'சினிமா வீரன்' படத்தின் போஸ்டரை டிவிட்டரில் பகிர்ந்த ஐஸ்வர்யா, "சினிமா வீரன், தமிழ் சினிமாவின் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு என்னுடைய அர்ப்பணிப்பு. அவர்கள் புகழப்படாத நிஜ நாயகர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்தப் படம் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். "எனது குதுப் ஈ க்ரிபா இசைக் கலைஞர்களுடன் சினிமா வீரனில் பணியாற்றவுள்ளேன். தமிழ் சண்டைக்காட்சி கலைஞர்களை புகழும் படம்" என்ற டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

 

 

மூலக்கதை