ஆஸ்கார் விருது வழங்குவதில் நிறப்பாகுபாடா? சர்ச்சை தொடர்கிறது.

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
ஆஸ்கார் விருது வழங்குவதில் நிறப்பாகுபாடா? சர்ச்சை தொடர்கிறது.

நியூயார்க், பிப்.27-

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்கார் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட அனைவருமே வெள்ளையினத்தை சேர்ந்த நடிகர்கள்.

அமெரிக்காவின் மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகமோ எதிர்வரும் 2044ஆம் ஆண்டுவாக்கில் நாட்டின் வெள்ளையின மக்கள் சிறுபான்மையினராக இருப்பார்கள் என கணித்துள்ளது. இருப்பினும், இவர்கள் ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் அதிகமாகவே இடம்பெற்றுள்ளனர். ஆனால் யாருக்கு அதிகம் இழப்பு?

ஆஸ்கார் விருதுகள் என்றழைக்கப்படும் அகாடாமி விருதுகள் தொடங்கி 88 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த ஆண்டுக்கான தேர்வும் விருது வழங்கும் நிகழ்ச்சியும் பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெறுகிறது.

சிறந்த நடிகர், நடிகை, துணை நடிகர்கள் என முக்கியப் பிரிவுகளில் வெள்ளையர்களின் பெயர்களே பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மைக்கேல் பி ஜோர்டான், இத்ரிஸ் எல்பா போன்ற கருப்பின நடிகர்கள் முக்கிய விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படாதது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளன. கருப்பின நடிகர்கள் அகாடமி விருதுகளுக்கு புறக்கணிக்கப்படுகிறார்கள் எனும் குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

அந்த விருதுகளுக்கு வாக்களிக்கவுள்ளவர்கள் யாரென்பதை மனதில் வைத்தே ஆப்ரிக்க-அமெரிக்க நடிகர் மற்றும் நடிகைகளுக்கு போதிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அகாடமியிலுள்ள 6,000 உறுப்பினர்களில் 94% வெள்ளையினத்தவர்.

இதன் காரணமாக இந்த ஆண்டு பல பிரபலங்கள் விருது வழங்கும் நிகழ்வை புறக்கணித்துள்ளனர். அதிலும் குறிப்பாக இயக்குநர் ஸ்பைக் லீ மற்றும் நடிகை ஜாடா பிண்கெட் ஆகியோர், தமது எதிர்ப்புகளைத் தெரிவிப்பதற்காவே விழாவை புறக்கணிக்கிறோம் என அறிவித்துள்ளனர்.

ஆஸ்கார் விருதுகளில் பன்முகத்தன்மை இல்லை என சமூக ஊடகங்களிலும் பிரச்சாரங்கள் நடைபெறுகின்றன.

கடந்த ஆண்டும் விருதுகளுக்கு “வெள்ளையடிக்கப்பட்டன” என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் இந்த விமர்சனங்கள் நியாயமானவையா? கடந்த பல ஆண்டுகளில் ஆஸ்கார் விருதுகள் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கவில்லையா? மொத்த திரையுலகுமே அப்படித்தான் உள்ளதா? இப்படி பல கேள்விகளும் எழுந்துள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கத் திரையுலகில் இருக்கும் இன மற்றும் பாலியல் பன்முகத்தன்மை குறித்த ஆய்வை தெற்கு காலிஃபோர்னியா பல்கலைக்கழகம் வெளியிடுகிறது.

நடிப்பு, இயக்கம், இதர பணிகள் ஆகியவற்றில் எவ்வித பின்புலம் கொண்டவர்கள் எந்த அளவில் இருக்கின்றனர் என அந்த ஆய்வு கூறுகிறது.

கடந்த 2006-2013 ஆண்டுகாலப்பகுதிக்கான அறிக்கையில் இருக்கும் தகவல்களை ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, ஹாலிவுட்டில் இந்த நூற்றாண்டில் எந்த அளவுக்கு இன விகிதாச்சாரம் பிரதிபலிக்கின்றன என்பது தெரியவருகிறது. அந்த முடிவுகள் ஒருவேளை ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கலாம்.

 

 

மூலக்கதை