பிரபல ஹாலிவுட் நடிகர் ஜியார்ஜ் கென்னடி காலமானார்!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜியார்ஜ் கென்னடி காலமானார்!

 நியூயார்க், மார்ச் 1-

ஆங்கிலத் திரையுலகின் பிரசித்தி பெற்ற நடிகர்களில் ஒருவரான ஜியார்ஜ் கென்னடி தம்முடைய  91 ஆவது வயதில் காலமானார்.

‘நேக்கெட் கன்’ படத் தொடர், மற்றும்‘கூல் ஹேண்ட் லூக்’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற ஜியார்ஜ் கென்னடி, நேற்று உயிர் நீத்ததாக அவருடைய பேரன்  கோரி  ஸ்கென்கெல்  தெரிவித்தார்.

இடாஹோ மாநிலத்திலுள்ள போய்ஸ் நகரில் மருத்துவமனை ஒன்றில் அண்மைய காலமாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஆண்டு அவருடைய துணைவியார் ஜோகன் காலமான பின்னர் அவர் மிகுந்த கவலையில் இருந்துவந்தார்.

1924ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் பிறந்த ஜியார்ஜ் கென்னடி, ஒரு கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை ஓர் இசைக் கலைஞர். தாயார் ஒரு நடனமணி.

2ஆம் உலகப் போரில் அமெரிக்கப் படையில் பணிபுரிந்து பல விருதுகளைப் பெற்றவர் இவர். 1968ஆம் ஆண்டில் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதை இவர் வென்றார். 1975இல் வெளிவந்த ‘எர்த் குவெக்’ திரைப்படம் ஜியார்ஜ் கென்னடிக்கு புகழ் தந்த படங்களில் ஒன்றாகும்.

இவர் ஆகக் கடைசியாக, 2014 ஆம் ஆண்டில் வெளிவந்த  ‘தி கேம்பளர்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

 

 

மூலக்கதை