தெறி படத்தில் சமந்தாவின் சொந்தக் குரல்- தெறித்த ரசிகர்கள்

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
தெறி படத்தில் சமந்தாவின் சொந்தக் குரல் தெறித்த ரசிகர்கள்

சென்னை, பிப்.29- விஜய் நடிப்பில் அடுத்து வெளிவரும் படம் தெறி. அண்மையில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியாகி மிகவும் பிரபலமானது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார். இது தெரிந்த விசயம் என்கிறீர்களா? 

தெரியாத விசயம் ஒன்று உண்டு. தெறி படத்தில் நடிக்கும் சமந்தா சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளார். கடந்த 27ம் தேதி தன்னுடைய டப்பிங் வேலைகள் முடிந்துவிட்டதாக சமந்தா தன் டுவீட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.

சமந்தா ஏற்கனவே சொந்தக் குரலில் பேசி நடித்த நீ தானே என் பொன்வசந்தம், 10 என்றதுகுள்ள படங்கள் தோல்வி அடைந்த நிலையில் தெறி படத்திலும் சமந்தா சொந்தக் குரலில் பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. 

சமந்தாவின் சொந்தக் குரல் படத்திற்கு பலமா? பலவீனமா? பொறுத்திருந்து பார்ப்போம். 

மூலக்கதை