6 தடவைக் காத்திருந்து ஆஸ்கார் விருதை வென்றார் டைட்டானிக் நாயகன்

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
6 தடவைக் காத்திருந்து ஆஸ்கார் விருதை வென்றார் டைட்டானிக் நாயகன்

லாஸ் ஏஞ்சல்ஸ், பிப்.29- ஆஸ்கார் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை டைட்டானிக் நாயகன் லியானாடோ டிக்கார்பியோ வென்றார். அவர் தி ரெவனன்ட் எனும் படத்தில் நடித்ததற்காக இவ்விருதினை வென்றார்.

இதற்குமுன், 6 முறை ஆஸ்கார் விருதில் சிறந்த நடிகருக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டு தேர்வாகாமல் இருந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை இவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா என அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரம், இவரின் பெயர் அறிவித்தப்போது பெருத்த கரவோஷம் எழுந்தது.

ஒவ்வொரு முறையும் ஆஸ்கார் விருதுக்கு செல்லும்போது இவர் மேடையில் பேச குறிப்பு எடுத்துச் செல்வாராம். இதுவரை 12 முறை இவர் மேடைக்கான பேச்சை தயார் செய்து வைத்திருந்தாராம். இம்முறை மட்டுமே அவருக்கே மேடையில் பேச வாய்ப்பு கிடைத்துள்ளது.

மூலக்கதை