இரு முகன்: திருநங்கை வேடத்திற்கு விக்ரம் பயிற்சி!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
இரு முகன்: திருநங்கை வேடத்திற்கு விக்ரம் பயிற்சி!

சென்னை, பிப்.28-

'இருமுகன்' படத்தில் 'ரா' உளவுப் பிரிவு ஏஜெண்ட் மற்றும் திருநங்கை என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார் விக்ரம்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் 'இருமுகன்' படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்

.இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டப் படப்பிடிப்பு அண்மையில் மலேசியாவில் நடத்தப்பட்டது. மலேசியப் படப்பிடிப்பு முழுமையடைந்து விட்டதால் அடுத்த கட்டமாக சென்னையில் படப்பிடிப்பு தீவிரமடைந்திருக்கிறது.

சென்னையில் பிரம்மாண்டமான சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கி வருகிறார்கள். இப்போது 'ரா' உளவுப் பிரிவு ஏஜெண்ட் கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பு மட்டுமே நடத்தி வருகிறார்கள். பின்னர், திருநங்கை கதாபாத்திரத்துக்கு தன்னைத் தயார்படுத்தத் தொடங்குவார் விக்ரம்.

முதன்முறையாக திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் விக்ரம். இதற்காக திருநங்கைகளின் உடல் அசைவுகள், அவருடைய பேச்சு மொழி உள்ளிட்ட விஷயங்களை தெரிந்து கொண்டு வருகிறார் விக்ரம்.

அவ்வப்போது படப்பிடிப்புக்கு இடையே நேரம் கிடைக்கும் போது, திருநங்கை கதாபாத்திரத்துக்கான விஷயங்களை நுணுக்கமாக கற்றறிந்து வருகிறார்.

 

 

மூலக்கதை