மலாய் பேசவிருக்கும் ரஜினியின் கபாலி

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
மலாய் பேசவிருக்கும் ரஜினியின் கபாலி

கோலாலம்பூர், பிப்.19- சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான கபாலி மலாய் மொழியில் மொழி மாற்றம் செய்யப்படவிருக்கிறது. ஏறக்குறைய 60 மில்லியன் ரிங்கிட் செலவில் தயாராகி கொண்டிருக்கும் கபாலி திரைப்படத்தின் 80 விழுக்காடு படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தது அனைவரும் அறிந்ததே.

இப்படம் மலாய் மொழியிலும் மொழி மாற்றம் செய்ய ரஜினி ஒப்புக் கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. மலேசியாவில் படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் தற்போது குரல் பதிவிற்காக வேலைக்காக இந்தியாவில் திரும்பியுள்ளனர். தமிழில் குரல் பதிவு வேலைகள் முடிந்த பின் மலாய் மொழியில் குரல் பதிவு செய்யும் வேலைகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

கபாலி படத்தில் மலேசிய கலைஞர்களான டத்தோ ரோஸ்யாம் நோர், நோர்மான் ஹகிம் மற்றும் ஷேக் தைபன் ஆகியோர் நடித்துள்ளனர்.

மூலக்கதை