தலைவா நான் உன் ரசிகன் - ஷாருக்கான்

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
தலைவா நான் உன் ரசிகன்  ஷாருக்கான்

மும்பை, பிப்.24-

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர் ஷாருக்கான். அவர் நடித்து வெளிவந்த சென்னை எக்ஸ்பிரஸ் எனும் இந்திப்படத்தில் ரஜினிக்காகவே தலைவா எனும் பாடல் இடம்பெற்றது. அதோடு ரா ஓன் படத்திலும் ரஜினியை ஒரு காட்சியில் தோன்ற வைத்தார் ஷாருக்கான்.

அவ்வகையில், தற்போது மீண்டும் ரஜினி புகழ்பாடியுள்ளார் ஷாருக். 

ஷாருக்கான் நடிப்பில் அடுத்த படம் 'ஃபேன்'. இப்படத்திற்கு விளம்பர பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தன் மனம் கவர்ந்த ஒருவரை ரசிகர் நினைத்து பாடுவது போலான இப்பாடல் இந்தி, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி மற்றும் தமிழில் வெளியாகியுள்ளது. 

இதன் தமிழ்ப் பதிப்பை நேற்று தனது டிவீட்டரில் பதிவேற்றம் செய்த ஷாருக்கான், அதில் "ரஜினி சார், நான் நட்சத்திரம் அல்ல, உங்களின் எண்ணிலடங்கா ரசிகர்களில் ஒருவன். அதில் நான் பெருமைக் கொள்கிறேன்" என்று பதிவேற்றம் செய்துள்ளார்.

மூலக்கதை