‘பீப்’ பாடல்: நடிகர் சிம்புவிடம் போலீஸ் கேட்ட35 கேள்விகள்!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
‘பீப்’ பாடல்: நடிகர் சிம்புவிடம் போலீஸ் கேட்ட35 கேள்விகள்!

சென்னை, பிப்.23-

சர்ச்சைக்குரிய ‘பீப்’ பாடலைப் பாடியது தாமே என்று விசாரணையில் போலீசாரிடம் நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். ஆனால், சமூக வலைத் தளத்தில் அந்தப் பாடல் வெளியான விவகாரத்தில் தமக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பெண்களை இழிவுப் படுத்தி சமூக வலைத் தளங்களில் ‘பீப்’ பாடலை வெளியிட்டதாக நடிகர் சிம்பு மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. . இதுகுறித்து சிம்புவை விசாரித்த போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

சிம்புவிடம் முதல் கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 35 கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். சர்ச்சைக்குரிய ‘பீப்’ பாடலைப் பாடியதையும் அவர் ஒப்புக்கொண்டார். இந்தப் பாடலை தனிப்பட்ட முறையில் இசையமைத்துப் பாடி ரகசியமாக வைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.ஆனால், அந்தப் பாடல் சமூக வலைத் தளங்களில் வெளியான விவகாரத்தில் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும், இந்தப் பாடலுக்கும் அனிருத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் சிம்பு கூறியதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து நடிகர் சிம்பு செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் தற்போது பேச முடியாத சூழ்நிலையில் உள்ளேன். போலீசார் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன். இனி நடப்பதை கடவுள் பார்த்துக் கொள்வார் என்றார். 

 

 

மூலக்கதை