ரசிகனிடம் முத்தம் வாங்கிய விக்ரம்!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
ரசிகனிடம் முத்தம் வாங்கிய விக்ரம்!

திருவனந்தப்புரம், பிப்.23-

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோகள் அஜித், விஜய், சூர்யா போன்றவர்களுக்கு அதிகபடியான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் அனைவரது ரசிகர்களுக்கும் விக்ரமை பிடிக்கிறது.

அந்த அளவுக்குத் தனது மாறுபட்ட நடிப்பினால் பாகுபாடின்றி அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளார் விக்ரம். இதன்காரணமாக, அவர் வெளியூர்களுக்குச் செல்லும் போது, அவரைச் சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக் கொளவதில் ரசிகர்கள் அதிகபடியான ஆர்வம் காட்டுகிறார்களாம்.

 

கேரளாவில் நடைப்பெற்ற ஒரு திரைபட விழாவிற்கு நடிகர் விக்ரம் சென்றிருந்தபோது, அங்குள்ள ரசிகர்கள் அவரைச் சந்திக்கப் போராடினர். ஆனால், பாதுகாவலாளிகள் அவர்களைத் துரத்தியடித்துள்ளனர். இதைப்பார்த்த விக்ரம், காவலாளிகளைத் தடுத்து அந்த ரசிகர்களைச் சந்தித்து ‘செல்பி’ எடுத்துக்கொண்டார். அதில் ஒருவர், விக்ரம் கண்ணத்தில் முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிபடுத்தினார். இந்தச் சம்பவம் விக்ரமை நெகிழ வைத்து விட்டது என்று கூறனார்.

மூலக்கதை