ஐஸ் கோசோங் - மார்ச்சில் குளிரூட்ட வரும் உள்ளூர் தயாரிப்பு

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
ஐஸ் கோசோங்  மார்ச்சில் குளிரூட்ட வரும் உள்ளூர் தயாரிப்பு

கோலாலம்பூர், பிப்.24-

மலேசியத் தமிழ்த்திரைத்துறை பொருத்தமட்டில் இவ்வாண்டு ஏறுமுகமான ஆண்டாகும். நிறைய உள்ளூர் படைப்புகள் வெளிவர காத்திருக்கின்றன. அவ்வகையில் அடுத்த மாதம் ஐஸ் கோசோங் எனும் மலேசியத் திரைப்படம் வெளிவரவிருக்கிறது. 

எதிர்வரும் மார்ச் 3ம் தேதி இப்படம் மலேசிய திரையரங்குகளில் வெளியீடு காணவுள்ளது. இரண்டு மணிநேர படமான இதில் சசிகுமார், ஆல்வின் மார்தின், சங்கபாலன், பிரதீப், அகோந்திரன், அனு, ஷாமினி ஆகியோர் நடித்துள்ளனர். 

நகைச்சுவை படமான இதனை மனான் சுப்ரா எழுதி இயக்கியுள்ளார்.

பிரபல ஹிப் ஹோப் பாடகர் டாக்டர் பர்ன் (Dr.Burn) இப்படத்தின் 'தீம் சாங்' பாடலை இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை